Thursday, December 12, 2024

வீழ்ச்சி - கு. ப. ரா.

 அவராகச் சரண் புகுந்த அந்தக் காடு அவருக்கு ஒரு கூண்டாகப் போய்விட்டது.

பிரதாப்சிங் கூண்டில் அடைபட்ட சிங்கம் போல அதில் இங்கும் அங்குமாக இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தார். வெறி பிடித்தது போன்ற அந்த நடையே அவர் மனம் முற்றும் வேறு எதிலோ ஆழ்ந்திருந்ததென்பதை விளக்கிற்று.

இருட்டிக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. ஜகமே வாயடைபட்டது போலத் திடீரென்று மௌனமாகிவிட்டது. சுவர்க்கோழிகள் மட்டும்தான் இடைவிடாமல் கத்திக்கொண்டிருந்தன. தூரத்திலிருந்த ஆரவல்லி மலைகளின் சாரல் சதுப்புகளிலிருந்து கிளம்பிய “கொள்ளிவாய்ப் பிசாசுகள்” மட்டும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நடுநடுவே ஏதாவதொரு காட்டு மிருகம் அலறிய ஒலி கிளம்பிக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டின் மௌனத்தில் கலந்தது.

புரியும் கதை - கு. ப. ரா.

 1

நான் எழுதியனுப்பிய கதையைப் பத்திரிகாசிரியர் திருப்பிவிட்டார். அது சாதாரண ஜனங்களுக்குப் புரியாதென்று தாம் பயப்படுவதாயும் வேறொரு கதை எழுதியனுப்ப வேண்டுமென்றும் எழுதியிருந்தார். ஜனங்களுக்குப் புரியும்படி என்ன கதை எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. நான் பிறந்த கதையை எழுதட்டுமா? வளர்ந்த கதையை எழுதட்டுமா? அது ருசிகரமாக இல்லை என்று எழுதுவார் பத்திரிகாசிரியர். எனக்குக் கோபம் வந்தது. அந்தச் சமயத்தில் ராதா தன் காரியங்களை முடித்துக்கொண்டு அறைக்குள் வந்தாள். ‘புரியும் கதை’ என்ற தலைப்பைப் போட்டுவிட்டு, நான் மேஜையின் முன்பு பேனாவும் கையுமாக யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் மனைவி பின்புறமாக வந்து, அந்தத் தலைப்பைப் படித்தாள். என்ன நினைத்தாளோ?

“என்ன கதை வேண்டியிருக்கிறது எப்பொழுது பார்த்தாலும்? அனுப்புகிறதெல்லாம் திரும்பி வருகிறது!”

Wednesday, December 11, 2024

கனகாம்பரம் - கு. ப. ரா.

 1

“மணி!”  என்று வாசலில் நின்றுகொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.

“எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?” என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.

மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்து படித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. புதுக்குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை.

கதைக்காரன் கர்வம் - கு. ப. ரா.

“அதென்னவோ எனக்குத் தெரியாது. ‘வசந்தா டாக்கீஸு’க்கு நீ ஒரு சமூகக் கதை எழுதிக் கொடுத்தாக வேண்டும். ‘ஆகட்டும்’ என்று நீ வாக்குறுதி கொடுத்தால் தான் உன்னை விடுவேன்.”

“டாக்கிக்குக் கதை எழுதும் திறமை எனக்கு இல்லையே என்ன செய்வேன்?”

“சினிமாக் கதை எழுதத் திறமையே வேண்டியதில்லை. சொல்லப்போனால் கதைகூட வேண்டியதில்லை.”

“பின் என்னதான் வேண்டும்?”

“நல்ல சம்பாஷணை; நல்ல பாட்டு.”

ஸ்டூடியோ கதை - கு. ப. ரா.

“அம்மா, இதோ பாருங்கள். எங்கே, இன்னும் கொஞ்சம் மேலே பாருங்கள் - இல்லை, கொஞ்சம் பக்கமாக - இல்லை, இப்படி -” என்று சொல்லிக்கொண்டு, டைரக்டர் மிஸ் ஸீதாவினுடைய முகத்தை அலட்சியமாகத் தொடுவது போலத் தம் கையால் திருப்பினார்.

“ஸார், எவ்வளவு தரம் உங்களுக்குச் சொல்லுகிறது டைரக் ஷன் மட்டும் செய்யுங்கள் என்று? நீங்கள் எப்படி ஆடச் சொல்லுகிறீர்களோ ஆடிவிடுகிறேன் - தலை கொடுத்தாய்விட்டது - ஆனால் மற்றொருதரமும் கண்டிப்பாகச் சொல்லுகிறேன்; என்னைத் தொடக் கூடாது!” என்று சீதா கோபத்துடன் சொன்னாள்.

உயிரின் அழைப்பு - கு. ப. ரா.

 1

“அக்கா எழுந்து வாங்கோ!” என்று சீதாலக்ஷ்மி கெஞ்சின பாவனையாகக் கூப்பிட்டாள்.

“இன்னிக்கு இனிமே என் மனசு சமாதானப்படாது-நீ போய் எல்லாம் செய், போ?” என்றுவிட்டாள் அலமு.

“நீங்க வரணும். இல்லாட்டா நான் போகமாட்டேன்.”

“அதோ, பாட்டி கூப்படரா, போ, சொன்ன பேச்சுக் கேளு.”

“நீங்க வாங்கோ!” என்று சீதாலக்ஷ்மி பிடிவாதமாக நின்றாள்.

என்ன தைரியம்? - கு. ப. ரா.

ஊரோசை அடங்கிவிட்டது. ‘ராக்காலப் பிச்சை தாயே!’ என்று ராகம் போட்டுப் பிச்சை கேட்டவர்கள் கூடத் திரும்பிப் போய்த் தெருக்கோடியில் கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு உறங்க முயலும் வேளை. மூன்றாவது வீட்டில் கடிகாரம் பதினொன்று அடித்தது கேட்டது.

பகலெல்லாம் உத்தியோக அடிமைத்தனத்தில் ஆபீஸர் முன்பு நின்றுகொண்டே இருந்ததால் சிரமம் மேலிட்டுத் தூங்க ஆரம்பித்தேன். குழந்தையை எழுப்பும் சத்தத்தில் நானும் எழுந்திருக்க வேண்டுமென்று, என் மனைவி கொஞ்சம் உரக்க என் காதில் கேட்க வேண்டுமென்று பேசியது எனக்குக் கோபம் மூட்டியது.

Wednesday, November 10, 2021

கவி வேண்டிய பரிசு - கு. ப. ரா.

பாதுஷாவும் கவி ஜகன்னாதரும் சொக்கட்டானாடிக் கொண்டிருந்தார்கள்.

அரசனும் கவியும் அவ்விரண்டு ஸ்தானங்களுக்கும் அக்காலத்திற்குரிய சின்னங்கள்போல விளங்கினார்கள்.

- மொகலாய சாம்ராஜ்ய சக்தி ஒருபுறம், ஹிந்து கலைஞான சக்தி மற்றொரு புறம்.

வீரம்மாளின் காளை - கு. ப. ரா.

வீட்டின் பின்புறக் கொட்டிலில் வீரம்மாள் தனியாக உட்கார்ந்திருந்தாள். அழுகையால் சிவந்திருந்த அவளுடைய பெரிய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது. மோவாய்க் கட்டையை வலது உள்ளங்கையில் தாங்கி ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தாள். கோதி அள்ளிச் செருகியிருந்த தலைமயிரில் காலையில் வைத்துக்கொண்ட செவ்வந்திப் பூவும், கள்ள நாட்டு வழக்கப்படி பட்டைக்காரையுடன் சேர்த்துக் கழுத்தில் போடப்பட்டிருந்த பூவும், அப்படியே இருந்தன. காலையில் அணிந்த புதுச் சேலைகூட மாற்றப்படாமல் இருந்தது.

காதலே சாதல் - கு. ப. ரா.

ஒருவித உணர்ச்சிப் பெருக்கு மிதமிஞ்சிய ஒரு சந்தர்ப்பத்தில் ஐம்புலன்களையும் சிதறவடித்து, ஜீவனின் சுயப்பிரக்ஞையை அறவே ஒழித்து, சரீரத்தையே நடைபிணமாக்கக் கூடும் என்பதற்கு என் தோழி ருக்மிணி ஓர் அத்தாட்சி. அதிகம் படித்தவளன்று. ஒரு கிராமப் பெண்; இந்து ஸ்திரீ தர்ம வழியில் ‘அடிமை’யாகக் காலங்கழித்தவள்... மூன்று வருஷங்களாகின்றன. அவள் இந்தமாதிரி அன்று முதல் ‘சித்தப் பிரமை’ கொண்டு இருப்பது, வைத்தியர்களுக்கே திகைப்பாக இருக்கிறது. ‘ஹிஸ்டரியா’ எனப்படும் மூர்ச்சை நோயுமல்ல; பைத்தியமுமல்ல. நிலைகுத்தலைப் போன்ற உயிரற்ற கண்கள் ஓரிடத்தைப் பார்த்தால் பார்த்தவண்ணமே இருக்கும். முகத்தில் எப்பொழுதும் உணர்வற்ற தோற்றம். இது பொதுவான நிலை.

புனர் ஜன்மம் - கு. ப. ரா.

1

அதற்கு முன் விசுவேசுவரன் அவளை நேரில் பார்த்ததில்லை. சகோதரி சாரதா என்றைக்கோ ஒரு நாள் ஒரு புகைப்படத்தை அவனுக்குக் காட்டினாள். அதிலிருந்து அவள் சாரதாரணமாகக் காணக்கூடாத சரீர அமைப்பும் அழகும் வாய்ந்தவள் என்று அறிந்தான். ஆனால் அந்த அழகின் பெருமிதம் அவன் மனத்திற்கு அதிகமாகப்பட்டது. அங்கங்களின் பூரிப்பும் முகத்தின் நிறைவும் ஒரு ராஜஸக் களை பெற்றிருந்தன; பார்த்த மாத்திரத்தில் மிருக உணர்ச்சியைத் துண்டுவனவாக இருந்தன.

சிறு கதை - கு. ப. ரா.

பக்கத்தில் வந்து அவ்வளவு நேரமாக நின்ற தன்னைக்கூடக் கவனிக்காமல், தன் புருஷன் எதையோ வாசித்துக்கொண்டிருந்தது மீனாக்ஷிக்குக் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. அதை அடக்கிக்கொண்டு, “என்ன வாசிக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

ராஜத்தின் காதல் - கு. ப. ரா.

அன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் மத்தியான்னம் சாப்பாடானதும் வீட்டைக் கொஞ்சம் சுத்தப்படுத்தலாம் என்று முனைந்தேன். இருட்டறையான உக்கிராணத்துள், அடுக்குள், அலமாரி, புரை எல்லாவற்றையும் காலிசெய்து சாமான்களைக் கூடத்தில் கொண்டுவந்து நிறைத்தேன்.

ஒரு ‘வேலையில்லா மூளை’ - கு. ப. ரா.

திருச்சியில் என் மைத்துனனுக்குக் கல்யாணம். கேட்க வேண்டுமா என் மனைவியின் உற்சாகத்தைப்பற்றி? ஒரு வாரத்திற்கு முன்னிருந்து வீட்டில் அமளிதான். புது ரவிக்கைகள், புதுப் பாவாடைகள், புது அங்கிகள் - குழந்தைகளுக்கு-எல்லாம் தயாராயின. நாலுநாள் முன்னதாகவே ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு புறப்பட்டோம். சாயந்திரம் 5:45க்கு ரயில்வண்டி கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டது. சுமார் 7:30 மணிக்குத் தஞ்சாவூர் ஜங்ஷனுக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கே குழந்தைகளுக்குப் பொம்மை, பக்ஷணம் முதலியவும் எனக்குப் பேப்பரும் என் மனைவிக்கு - அவளுக்கு வேண்டியது பூவைத் தவிர அங்கொன்றும் விற்கப்படவில்லை - எல்லாம் வாங்கினேன். பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

மனக்கோட்டை - கு. ப. ரா.

எஸ். விசுவநாதய்யர், பி.ஏ., பி.எல். மதுரையில் புதுத்தெருவில் வசித்து வந்தார். வக்கீல் தொழிலை ஆரம்பித்து எட்டு வருஷங்களாயின.

ஒத்துழையாமையின் உன்னத நாட்களில் அந்தக் கிளர்ச்சிச் சுழலில் அகப்படாத வாலிபர்களில் அவர் ஒருவர். காந்தியை மகான் என்றார். அவருடைய வழி தனி நபர்களுக்கேற்ற ஒரு ஸாதனையே ஒழிய, ஒரு சமூகத்தைத் தீங்கில்தான் இறக்குமென்று கருதினார்.

பண்ணைச் செங்கான் - கு. ப. ரா.

 1

“இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பளம் கல்கண்டு கணக்கா ருசியா இருக்கும்! இந்தத் தென்ன மரம் - அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புலே நடந்து பளக்கமில்லை. பட்டண வாசத்துப் புள்ளே” என்ற வேகமாக விடாமல் பேசினான் செங்கான்.

நானும் அவனும் என் நிலத்தில் ஒரு புறத்து வரப்பின் மேல் நடந்து போய்க் கொண்டிருந்தோம்.

ஸம ஆராதனை - கு. ப. ரா.

புரட்டாசி மாதத்துக் கடைசி சனிக்கிழமை. காலேஜ் புரொபஸர் வெங்கடேச்வர அய்யர் வீட்டில் வெங்கட ரமணஸ்வாமி ஸமாராதனை என்று வைதீக பிராமணர்கள் அங்குமிங்கும் பரபரப்புடன் சென்றுகொண்டிருந்தார்கள். காலை எட்டு மணி முதலே அக்கிரஹாரத்துப் பையன்கள் அந்த வீட்டு வாசலில் டிகாணா போட்டுவிட்டார்கள். தூணைச் சுற்றுவதும் ஓடி விளையாடுவதும் கட்டியிருந்த வாழை மரத்துப் பட்டைகளைப் பிய்த்துப் போடுவதுமாக வெகுமும்முரமாக இருந்தார்கள். நாதஸ்வரக்காரன் ஸாவேரி ராகத்தை ஆலாபனம் செய்து பல்லவி பாடி ஸ்வரங்களைச் சரமாரியாகப் பொழிந்துகொண்டிருந்தான். அவ்வீட்டுப் பெண்கள் ஸ்நானம் செய்து புதுப்புடவைகள் உடுத்துப் பூச்சுற்றின கோடாலி முடிச்சுக்களுடனும் நெற்றி குங்கும அழகுடனும் விளங்கிக்கொண்டு இங்குமங்கும் போய்க்கொண்டிருந்தார்கள்.

காமுவின் கதை - கு. ப. ரா.

விடிந்ததும் விடியாமலும் - இந்தச் சந்தர்ப்பத்தில் படுக்கையை விட்டு எழுந்ததும் என்று சொல்வது பொருந்தும். காமு, தமிழ் ‘டைப்ரைட’ரிடம் சென்று உட்கார்ந்துகொண்டு, எதையோ பதினைந்து நிமிஷம் மடமடவென்று அடித்தது நடேசனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவள் அவ்வளவு லாகவத்துடன் அடித்ததைப் பற்றி அவனுக்கு ஆச்சரியம் இல்லை. அதைக் கற்க ஆரம்பித்த மூன்று மாசத்திற்குள், அவள் சர்வ சாதாரணமாக அதைக் கையாளச் சக்தியுள்ளவளாகி விட்டாள். உணர்வுடனும் ஊக்கத்துடனும் அவள் அதைப் பழகிக்கொண்டது அவனுக்கு உத்ஸாகத்தைக் கொடுத்தது. அன்று அவள் பல்கூடத் தேய்க்காமல் ‘டைப்’ அடிக்க ஆரம்பித்ததுதான் அவனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிற்று.

குந்துமணி - கு. ப. ரா.

விளக்கு வைக்கிற நேரம்; சிதறிய சில நக்ஷத்திரங்கள் பொரிவாரி இறைத்தது போல வானத்தில் கிடந்தன. ராஜலக்ஷ்மி கையிலிருந்த தம்புராவைக் கீழே வைத்துவிட்டு, இருட்டுகிறதையும் மறந்து உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ராமு நாற்காலியில் சாய்ந்தவண்ணம் யோசனையிலாழ்ந்திருந்தவன் போலப் பேச்சற்றிருந்தான்.

Monday, October 18, 2021

அடிமைப் பயல் - கு. ப. ரா.

விளக்கு வைத்து இரண்டு நாழிகைதான். வீரகனூரில் ஊரோசை அடங்கிவிட்டது. தெருவாசலில் அவிழ்த்துப் போட்ட நெல் வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. வெள்ளி முளைக்கிற நேரத்திற்குக் கட்டி, வெய்யில் வேளைக்கு ஆத்தூர் போய்ச் சேர்ந்துவிட வேண்டியதற்காக, இரவே மூட்டைகளை ஏற்றித் தயாராக இருந்தன. மாடுகள் வைக்கோல் தின்றபோது அசைந்த கழுத்து மணிகளுடைய சத்தம் ஒரே தினுசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வண்டிக்காரர்கள் வீட்டுத் திண்ணைகளிலும் குறடுகளிலும் படுக்க யத்தனம் செய்துகொண்டிருந்தார்கள்.