Wednesday, November 10, 2021

கவி வேண்டிய பரிசு - கு. ப. ரா.

பாதுஷாவும் கவி ஜகன்னாதரும் சொக்கட்டானாடிக் கொண்டிருந்தார்கள்.

அரசனும் கவியும் அவ்விரண்டு ஸ்தானங்களுக்கும் அக்காலத்திற்குரிய சின்னங்கள்போல விளங்கினார்கள்.

- மொகலாய சாம்ராஜ்ய சக்தி ஒருபுறம், ஹிந்து கலைஞான சக்தி மற்றொரு புறம்.

வீரம்மாளின் காளை - கு. ப. ரா.

வீட்டின் பின்புறக் கொட்டிலில் வீரம்மாள் தனியாக உட்கார்ந்திருந்தாள். அழுகையால் சிவந்திருந்த அவளுடைய பெரிய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது. மோவாய்க் கட்டையை வலது உள்ளங்கையில் தாங்கி ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தாள். கோதி அள்ளிச் செருகியிருந்த தலைமயிரில் காலையில் வைத்துக்கொண்ட செவ்வந்திப் பூவும், கள்ள நாட்டு வழக்கப்படி பட்டைக்காரையுடன் சேர்த்துக் கழுத்தில் போடப்பட்டிருந்த பூவும், அப்படியே இருந்தன. காலையில் அணிந்த புதுச் சேலைகூட மாற்றப்படாமல் இருந்தது.

காதலே சாதல் - கு. ப. ரா.

ஒருவித உணர்ச்சிப் பெருக்கு மிதமிஞ்சிய ஒரு சந்தர்ப்பத்தில் ஐம்புலன்களையும் சிதறவடித்துஜீவனின் சுயப்பிரக்ஞையை அறவே ஒழித்துசரீரத்தையே நடைபிணமாக்கக் கூடும் என்பதற்கு என் தோழி ருக்மிணி ஓர் அத்தாட்சி. அதிகம் படித்தவளன்று. ஒரு கிராமப் பெண்இந்து ஸ்திரீ தர்ம வழியில் ‘அடிமை’யாகக் காலங்கழித்தவள்... மூன்று வருஷங்களாகின்றன. அவள் இந்தமாதிரி அன்று முதல் ‘சித்தப் பிரமை’ கொண்டு இருப்பதுவைத்தியர்களுக்கே திகைப்பாக இருக்கிறது. ‘ஹிஸ்டரியா’ எனப்படும் மூர்ச்சை நோயுமல்லபைத்தியமுமல்ல. நிலைகுத்தலைப் போன்ற உயிரற்ற கண்கள் ஓரிடத்தைப் பார்த்தால் பார்த்தவண்ணமே இருக்கும். முகத்தில் எப்பொழுதும் உணர்வற்ற தோற்றம். இது பொதுவான நிலை.

புனர் ஜன்மம் - கு. ப. ரா.

1

அதற்கு முன் விசுவேசுவரன் அவளை நேரில் பார்த்ததில்லை. சகோதரி சாரதா என்றைக்கோ ஒரு நாள் ஒரு புகைப்படத்தை அவனுக்குக் காட்டினாள். அதிலிருந்து அவள் சாரதாரணமாகக் காணக்கூடாத சரீர அமைப்பும் அழகும் வாய்ந்தவள் என்று அறிந்தான். ஆனால் அந்த அழகின் பெருமிதம் அவன் மனத்திற்கு அதிகமாகப்பட்டது. அங்கங்களின் பூரிப்பும் முகத்தின் நிறைவும் ஒரு ராஜஸக் களை பெற்றிருந்தனபார்த்த மாத்திரத்தில் மிருக உணர்ச்சியைத் துண்டுவனவாக இருந்தன.

சிறு கதை - கு. ப. ரா.

பக்கத்தில் வந்து அவ்வளவு நேரமாக நின்ற தன்னைக்கூடக் கவனிக்காமல்தன் புருஷன் எதையோ வாசித்துக்கொண்டிருந்தது மீனாக்ஷிக்குக் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. அதை அடக்கிக்கொண்டு, என்ன வாசிக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

ராஜத்தின் காதல் - கு. ப. ரா.

அன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் மத்தியான்னம் சாப்பாடானதும் வீட்டைக் கொஞ்சம் சுத்தப்படுத்தலாம் என்று முனைந்தேன். இருட்டறையான உக்கிராணத்துள், அடுக்குள், அலமாரி, புரை எல்லாவற்றையும் காலிசெய்து சாமான்களைக் கூடத்தில் கொண்டுவந்து நிறைத்தேன்.

ஒரு ‘வேலையில்லா மூளை’ - கு. ப. ரா.

திருச்சியில் என் மைத்துனனுக்குக் கல்யாணம். கேட்க வேண்டுமா என் மனைவியின் உற்சாகத்தைப்பற்றி? ஒரு வாரத்திற்கு முன்னிருந்து வீட்டில் அமளிதான். புது ரவிக்கைகள், புதுப் பாவாடைகள், புது அங்கிகள் - குழந்தைகளுக்கு-எல்லாம் தயாராயின. நாலுநாள் முன்னதாகவே ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு புறப்பட்டோம். சாயந்திரம் 5:45க்கு ரயில்வண்டி கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டது. சுமார் 7:30 மணிக்குத் தஞ்சாவூர் ஜங்ஷனுக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கே குழந்தைகளுக்குப் பொம்மை, பக்ஷணம் முதலியவும் எனக்குப் பேப்பரும் என் மனைவிக்கு - அவளுக்கு வேண்டியது பூவைத் தவிர அங்கொன்றும் விற்கப்படவில்லை - எல்லாம் வாங்கினேன். பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

மனக்கோட்டை - கு. ப. ரா.

எஸ். விசுவநாதய்யர், பி.ஏ., பி.எல். மதுரையில் புதுத்தெருவில் வசித்து வந்தார். வக்கீல் தொழிலை ஆரம்பித்து எட்டு வருஷங்களாயின.

ஒத்துழையாமையின் உன்னத நாட்களில் அந்தக் கிளர்ச்சிச் சுழலில் அகப்படாத வாலிபர்களில் அவர் ஒருவர். காந்தியை மகான் என்றார். அவருடைய வழி தனி நபர்களுக்கேற்ற ஒரு ஸாதனையே ஒழிய, ஒரு சமூகத்தைத் தீங்கில்தான் இறக்குமென்று கருதினார்.

பண்ணைச் செங்கான் - கு. ப. ரா.

 1

இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பளம் கல்கண்டு கணக்கா ருசியா இருக்கும்! இந்தத் தென்ன மரம் - அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புலே நடந்து பளக்கமில்லை. பட்டண வாசத்துப் புள்ளே” என்ற வேகமாக விடாமல் பேசினான் செங்கான்.

நானும் அவனும் என் நிலத்தில் ஒரு புறத்து வரப்பின் மேல் நடந்து போய்க் கொண்டிருந்தோம்.

ஸம ஆராதனை - கு. ப. ரா.

புரட்டாசி மாதத்துக் கடைசி சனிக்கிழமை. காலேஜ் புரொபஸர் வெங்கடேச்வர அய்யர் வீட்டில் வெங்கட ரமணஸ்வாமி ஸமாராதனை என்று வைதீக பிராமணர்கள் அங்குமிங்கும் பரபரப்புடன் சென்றுகொண்டிருந்தார்கள். காலை எட்டு மணி முதலே அக்கிரஹாரத்துப் பையன்கள் அந்த வீட்டு வாசலில் டிகாணா போட்டுவிட்டார்கள். தூணைச் சுற்றுவதும் ஓடி விளையாடுவதும் கட்டியிருந்த வாழை மரத்துப் பட்டைகளைப் பிய்த்துப் போடுவதுமாக வெகுமும்முரமாக இருந்தார்கள். நாதஸ்வரக்காரன் ஸாவேரி ராகத்தை ஆலாபனம் செய்து பல்லவி பாடி ஸ்வரங்களைச் சரமாரியாகப் பொழிந்துகொண்டிருந்தான். அவ்வீட்டுப் பெண்கள் ஸ்நானம் செய்து புதுப்புடவைகள் உடுத்துப் பூச்சுற்றின கோடாலி முடிச்சுக்களுடனும் நெற்றி குங்கும அழகுடனும் விளங்கிக்கொண்டு இங்குமங்கும் போய்க்கொண்டிருந்தார்கள்.

காமுவின் கதை - கு. ப. ரா.

விடிந்ததும் விடியாமலும் - இந்தச் சந்தர்ப்பத்தில் படுக்கையை விட்டு எழுந்ததும் என்று சொல்வது பொருந்தும். காமுதமிழ் ‘டைப்ரைட’ரிடம் சென்று உட்கார்ந்துகொண்டுஎதையோ பதினைந்து நிமிஷம் மடமடவென்று அடித்தது நடேசனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவள் அவ்வளவு லாகவத்துடன் அடித்ததைப் பற்றி அவனுக்கு ஆச்சரியம் இல்லை. அதைக் கற்க ஆரம்பித்த மூன்று மாசத்திற்குள்அவள் சர்வ சாதாரணமாக அதைக் கையாளச் சக்தியுள்ளவளாகி விட்டாள். உணர்வுடனும் ஊக்கத்துடனும் அவள் அதைப் பழகிக்கொண்டது அவனுக்கு உத்ஸாகத்தைக் கொடுத்தது. அன்று அவள் பல்கூடத் தேய்க்காமல் ‘டைப்’ அடிக்க ஆரம்பித்ததுதான் அவனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிற்று.

குந்துமணி - கு. ப. ரா.

விளக்கு வைக்கிற நேரம்; சிதறிய சில நக்ஷத்திரங்கள் பொரிவாரி இறைத்தது போல வானத்தில் கிடந்தன. ராஜலக்ஷ்மி கையிலிருந்த தம்புராவைக் கீழே வைத்துவிட்டு, இருட்டுகிறதையும் மறந்து உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ராமு நாற்காலியில் சாய்ந்தவண்ணம் யோசனையிலாழ்ந்திருந்தவன் போலப் பேச்சற்றிருந்தான்.