Monday, October 18, 2021

அடிமைப் பயல் - கு. ப. ரா.

விளக்கு வைத்து இரண்டு நாழிகைதான். வீரகனூரில் ஊரோசை அடங்கிவிட்டது. தெருவாசலில் அவிழ்த்துப் போட்ட நெல் வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. வெள்ளி முளைக்கிற நேரத்திற்குக் கட்டி, வெய்யில் வேளைக்கு ஆத்தூர் போய்ச் சேர்ந்துவிட வேண்டியதற்காக, இரவே மூட்டைகளை ஏற்றித் தயாராக இருந்தன. மாடுகள் வைக்கோல் தின்றபோது அசைந்த கழுத்து மணிகளுடைய சத்தம் ஒரே தினுசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. வண்டிக்காரர்கள் வீட்டுத் திண்ணைகளிலும் குறடுகளிலும் படுக்க யத்தனம் செய்துகொண்டிருந்தார்கள்.

தனபாக்கியத்தின் தொழில் - கு. ப. ரா.

 

தனபாக்கியம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து தூக்கி வாரிப் போட்டது போலப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். பக்கத்தில் தான் எழுந்திருந்ததையும் உணராமல், ஷண்முகசுந்தரம் மனசை எங்கோ செலுத்தினவனாய் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள்.

“அப்போது முதலா தூங்காமல் உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டுக்கொண்டு மெதுவாக அவனுடைய தோளின் மேல் சாய்ந்தாள்.

தாயாரின் திருப்தி - கு. ப. ரா.

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட வாயைத் திறந்துகொண்டு மௌனமாக மரங்களில் உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காகப் பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்து வந்து சேர்ந்தார்கள்.

நூர் உன்னிஸா - கு. ப. ரா.

 

1

நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒரு வாரம் இருக்கும். ஒரு நாள் காலையில் நாற்காலியில் சாய்ந்துகொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப் போகிறதோ என்று யோசனை செய்து பார்த்துக்கொண்டிருந்தேன். நான் கைக்கொண்டு செய்யக்கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசீய இயக்கத்திலோ ஒரு தேக்கம்; காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் அப்பொழுது சிதைவுற்றுக் கிடந்தது.

விசாலாக்ஷி - கு. ப. ரா.

நல்ல நிலா. சாப்பாடானவுடன் நானும் மணியும் என்ன செய்யலாமென்று யோசித்தோம். காவேரி மணலில் சற்றுக் காற்றோட்டமாகப் படுத்திருக்கலாம் என்று எண்ணி அங்கே போய்ச் சேர்ந்தோம். மணலில் துண்டை விரித்துக்கொண்டு படுத்தோம். தூரத்திலிருந்து காமன் பண்டிகையின் கொட்டு முழக்குக் கேட்டது.

கதை மூலம் - கு. ப. ரா.

நதிமூலம் ரிஷிமூலம் என்பார்களே, அந்த மாதிரி, கதை மூலம் என்றும் ஒன்று உண்டு. அதைப்பற்றி அதிகம் கிளறாமல் இருப்பதே சிலாக்கியம். கிளறினால் கதை எழுதியவனுடைய அந்தரங்கமான அநுபவங்கள், எத்தனை அம்பலத்துக்கு வரவேண்டி இருக்குமோ!

சிறுகதை - கு. ப. ரா.

தற்காலத் தமிழ் இலக்கியம் என்பது எந்தக் காலத்திலிருந்து ஆரம்பமாகிறது, யாருடைய நூல்கள் முதல் அது துவங்குகிறது என்பது ஒரு தனி விஷயம்; அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்க இங்கே இடமில்லை. இப்பொழுது நமது சௌகரியத்திற்காக ஏறக்குறைய அது சுப்ரமணிய பாரதி காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். ஏனென்றால் தமிழ் இலக்கியத்தில் தற்காலத் தன்மை முற்றிலும் வாய்ந்த புதுவழிகளைப் பாரதிதான் முதல் முதலில் விரிவாகக் காவியம், வசனம் இரண்டிலும் கையாண்டார்.

கு. ப. ராஜகோபாலன் - ந. பிச்சமூர்த்தி

இரட்டையர்கள் என்று என்னையும் கு.ப.ரா.வையும் ஸ்ரீ வ. ரா. குறிப்பிடுவது வழக்கம். எங்கள் ஊரில்கூட எங்களை ராம லக்ஷ்மணர்கள் என்றுதான் சொல்லுவார்கள். ராமன் இருக்கிறான், லக்ஷ்மணனைத்தான் காணவில்லை; அல்லது லக்ஷ்மணன் இருக்கிறான், ராமனைத்தான் காணவில்லை என்றாலும் சரிதான். இனி, செய்ய என்ன இருக்கிறது?

கு.ப.ரா.வின் சிறுகதைகள் - க. நா. சுப்ரமண்யம்

கு.. ராஜகோபாலன் இறந்து இப்போது (1959) பதினைந்து வருஷங்களாகிவிட்டன. இந்தப் பதினைந்து வருஷங்களில் அவருடைய புதுத் தொகுப்புகள் எதுவும் வெளிவரவில்லை. ஒரு பதினைந்து வருஷங்கள் தமிழையே நம்பி வாழ முயன்ற அவர் சற்றேறக்குறைய எண்பத்தைந்து சிறுகதைகளும் பல சிந்தனைக் கட்டுரைகளும், ஓரங்க நாடகங்களும், வசன கவிதைகளும், விமரிசனக் கட்டுரைகளும், முடிவு பெறாத சில நீளக்கதை (நாவல்) களும் எழுதினார். கனகாம்பரம்’, ‘காணாமலே காதல்’, ‘புனர்ஜன்மம்என்கிற மூன்று சிறுகதைத் தொகுதிகளிலுமாக அறுபத்தி நாலு சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. இது தவிர, எத்தொகுதியிலும் இடம் பெறாமல் பத்திரிகைகளில் மட்டும் வெளியான கதைகள் இருபதுக்கு அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.