Thursday, December 12, 2024

வீழ்ச்சி - கு. ப. ரா.

 அவராகச் சரண் புகுந்த அந்தக் காடு அவருக்கு ஒரு கூண்டாகப் போய்விட்டது.

பிரதாப்சிங் கூண்டில் அடைபட்ட சிங்கம் போல அதில் இங்கும் அங்குமாக இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தார். வெறி பிடித்தது போன்ற அந்த நடையே அவர் மனம் முற்றும் வேறு எதிலோ ஆழ்ந்திருந்ததென்பதை விளக்கிற்று.

இருட்டிக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. ஜகமே வாயடைபட்டது போலத் திடீரென்று மௌனமாகிவிட்டது. சுவர்க்கோழிகள் மட்டும்தான் இடைவிடாமல் கத்திக்கொண்டிருந்தன. தூரத்திலிருந்த ஆரவல்லி மலைகளின் சாரல் சதுப்புகளிலிருந்து கிளம்பியகொள்ளிவாய்ப் பிசாசுகள்மட்டும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நடுநடுவே ஏதாவதொரு காட்டு மிருகம் அலறிய ஒலி கிளம்பிக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டின் மௌனத்தில் கலந்தது.

புரியும் கதை - கு. ப. ரா.

 1

நான் எழுதியனுப்பிய கதையைப் பத்திரிகாசிரியர் திருப்பிவிட்டார். அது சாதாரண ஜனங்களுக்குப் புரியாதென்று தாம் பயப்படுவதாயும் வேறொரு கதை எழுதியனுப்ப வேண்டுமென்றும் எழுதியிருந்தார். ஜனங்களுக்குப் புரியும்படி என்ன கதை எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. நான் பிறந்த கதையை எழுதட்டுமா? வளர்ந்த கதையை எழுதட்டுமா? அது ருசிகரமாக இல்லை என்று எழுதுவார் பத்திரிகாசிரியர். எனக்குக் கோபம் வந்தது. அந்தச் சமயத்தில் ராதா தன் காரியங்களை முடித்துக்கொண்டு அறைக்குள் வந்தாள். ‘புரியும் கதை’ என்ற தலைப்பைப் போட்டுவிட்டு, நான் மேஜையின் முன்பு பேனாவும் கையுமாக யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் மனைவி பின்புறமாக வந்து, அந்தத் தலைப்பைப் படித்தாள். என்ன நினைத்தாளோ?

என்ன கதை வேண்டியிருக்கிறது எப்பொழுது பார்த்தாலும்? அனுப்புகிறதெல்லாம் திரும்பி வருகிறது!”

Wednesday, December 11, 2024

கனகாம்பரம் - கு. ப. ரா.

 1

“மணி!”  என்று வாசலில் நின்றுகொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.

“எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?” என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.

மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்து படித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. புதுக்குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை.

கதைக்காரன் கர்வம் - கு. ப. ரா.

“அதென்னவோ எனக்குத் தெரியாது. ‘வசந்தா டாக்கீஸு’க்கு நீ ஒரு சமூகக் கதை எழுதிக் கொடுத்தாக வேண்டும். ‘ஆகட்டும்’ என்று நீ வாக்குறுதி கொடுத்தால் தான் உன்னை விடுவேன்.”

“டாக்கிக்குக் கதை எழுதும் திறமை எனக்கு இல்லையே என்ன செய்வேன்?”

சினிமாக் கதை எழுதத் திறமையே வேண்டியதில்லை. சொல்லப்போனால் கதைகூட வேண்டியதில்லை.”

“பின் என்னதான் வேண்டும்?”

நல்ல சம்பாஷணை; நல்ல பாட்டு.”

ஸ்டூடியோ கதை - கு. ப. ரா.

“அம்மா, இதோ பாருங்கள். எங்கே, இன்னும் கொஞ்சம் மேலே பாருங்கள் - இல்லை, கொஞ்சம் பக்கமாக - இல்லை, இப்படி -” என்று சொல்லிக்கொண்டு, டைரக்டர் மிஸ் ஸீதாவினுடைய முகத்தை அலட்சியமாகத் தொடுவது போலத் தம் கையால் திருப்பினார்.

“ஸார், எவ்வளவு தரம் உங்களுக்குச் சொல்லுகிறது டைரக் ஷன் மட்டும் செய்யுங்கள் என்று? நீங்கள் எப்படி ஆடச் சொல்லுகிறீர்களோ ஆடிவிடுகிறேன் - தலை கொடுத்தாய்விட்டது - ஆனால் மற்றொருதரமும் கண்டிப்பாகச் சொல்லுகிறேன்; என்னைத் தொடக் கூடாது!” என்று சீதா கோபத்துடன் சொன்னாள்.

உயிரின் அழைப்பு - கு. ப. ரா.

 1

அக்கா எழுந்து வாங்கோ!” என்று சீதாலக்ஷ்மி கெஞ்சின பாவனையாகக் கூப்பிட்டாள்.

“இன்னிக்கு இனிமே என் மனசு சமாதானப்படாது-நீ போய் எல்லாம் செய், போ?” என்றுவிட்டாள் அலமு.

“நீங்க வரணும். இல்லாட்டா நான் போகமாட்டேன்.”

“அதோ, பாட்டி கூப்படரா, போ, சொன்ன பேச்சுக் கேளு.”

“நீங்க வாங்கோ!” என்று சீதாலக்ஷ்மி பிடிவாதமாக நின்றாள்.

என்ன தைரியம்? - கு. ப. ரா.

ஊரோசை அடங்கிவிட்டது. ‘ராக்காலப் பிச்சை தாயே!’ என்று ராகம் போட்டுப் பிச்சை கேட்டவர்கள் கூடத் திரும்பிப் போய்த் தெருக்கோடியில் கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு உறங்க முயலும் வேளை. மூன்றாவது வீட்டில் கடிகாரம் பதினொன்று அடித்தது கேட்டது.

பகலெல்லாம் உத்தியோக அடிமைத்தனத்தில் ஆபீஸர் முன்பு நின்றுகொண்டே இருந்ததால் சிரமம் மேலிட்டுத் தூங்க ஆரம்பித்தேன். குழந்தையை எழுப்பும் சத்தத்தில் நானும் எழுந்திருக்க வேண்டுமென்று, என் மனைவி கொஞ்சம் உரக்க என் காதில் கேட்க வேண்டுமென்று பேசியது எனக்குக் கோபம் மூட்டியது.